இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல பிரபலங்களின் நடிப்பில் இரண்டு பாகங்களாக உருவாகி இருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது.
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், நேற்று பொன்னியின் செல்வன் 2 படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தற்போது அந்த அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா ட்வீட்டர் பக்கத்தில் மோஷன் போஸ்டர் வெளியீட்டு அறிவித்துள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…