கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்த பொன்னியின் செல்வன் படக்குழு.! அப்போ சூப்பர் ஸ்டார்????
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், படத்தின் முதல் பாடலான ‘அகநக’ பாடலை படக்குழு வெளியிட்டது. அந்த பாடல் நல்ல வரவேற்பு பெற்றுவரும் நிலையில், படத்தின் ஆடியோ லான்ச் மார்ச் 29ஆம் தேதி சென்னை நேரு அரங்கில் நடைபெற உள்ளது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், அன்றைய தினமே படத்தின் 3 நிமிட டிரைலர் வெளியாக உள்ளது.
இந்நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மார்ச் 29-ம் தேதி நடைபெறவுள்ள, ‘பொன்னியின் செல்வன்-2’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் பங்கேற்பார் என படக்குழு அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறபத்தினர்.
ஆனால், இந்த முறை கமல்ஹாசன் மட்டுமே வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. ஒரு வேளை, ரஜினிகாந்த் ஜெயிலர் ஷூட்டிங்கில் இருப்பதால், வர முடியவில்லையோ என்னவோ? தெரியவில்லை. இந்த விழாவுக்கு நாளை ஒரு நாள் மட்டும் உள்ளநிலையில், விரைவில் அதற்கான வருகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.