‘பொன்னியின் செல்வன்’ என்ற வரலாற்றுக் காவியம் நாவலைத் தழுவி திரைப்படமாக்கினார் இயக்குனர் மணிரத்னம். படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 அன்று வெளியானது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்து, படத்தின் இரண்டாம் பாகம் இன்று பிரம்மாண்டமாக வெளியாகிறது.
ஏற்கனவே, வெளியான பொன்னியின் செல்வன் 1 பிளாக்பஸ்டர் ஹிட்டானது, இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியது. மேலும் படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை தவிர இன்று சில மாநிலங்களில் காலை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, திரைப்படம் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால், இன்று தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் வெளியாக இருக்கிறது.
பொன்னியின் செல்வன் 2 இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் விளம்பரங்கள் மற்றும் படக்குழுவின் பேச்சுகள் படத்திற்கு முக்கியப் பங்கு வகுத்தன.
இப்படம் ரசிகர்கள் மனதில் பிரம்மாண்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய நிலையில், முதல் மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்யும் என்றும், ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.1000 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன்:
இப்படத்தில் சியான் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோர் மிகவும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபாலா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், பிரபு மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…
டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…