ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் அடுத்தாக காத்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்க, லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய் ஜெயம் ரவி , விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக இந்த படம் வெளியாகவுள்ளது. இதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படம் ஓடிடி-க்கு விலை பேசப்பட்டது என்ற தகவல் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதுஎன்னவென்றால், இந்த படத்தின் ஓடிடி உரிமைத்தை அமேசான் பிரேம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். அதுவும் சுமார் 125 கோடிக்கு முதல் பாகத்தையும், இரண்டாம் பாகத்தையும் சேர்த்து வாங்கி விட்டதாம்.
திரையரங்குகளில் வெளியான பின், இந்த படம் ஓடிடி-யில் வெளியாக தான் இந்த படம் 125 கோடிக்கு விலை பேசப்பட்டுள்ளதாம். அதுமட்டுமின்றி, இதுவரை அமேசான் பிரேமில் வெளியான எந்த தமிழ் படங்களும் இந்த விலைக்கு விற்பனையானதில்லயாம்.
500கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் வெளியாவதற்கு முன்பே இவ்வளவு விலைக்கு விற்பனை ஆகியுள்ளதால் தமிழ் சினிமாவே அதிர்ந்து போய்வுள்ளது. மேலும், விரைவில் படத்திற்கான முதல் பாடல்,டிரைலர் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…