மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கிவிட்டன. கார்த்தி, ஜெயம் ரவி முடித்துவிட்ட நிலையில் அடுத்து விக்ரம் தனது டப்பிங் பணிகளை ஆரம்பிக்க உள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக கொண்டு உருவாகி வரும் இந்த பிரமாண்ட திரைப்படத்தை லைகா நிறுவனம் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
2 பாகங்களாக தயாராகி வரும் இத்திரைப்படத்தின் 2 பாக ஷூட்டிங்கும் மொத்தமாக முடிந்துவிட்டது. தற்போது முதல் பாகத்திற்கான வேலைகள் மட்டும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதற்கான டப்பிங், எடிட்டிங், இசை கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி என இருவரும் தங்களது டப்பிங் பணிகளை முடித்துவிட்டனர். அடுத்து விக்ரம் மட்டும் தனது டப்பிங் பணிகளை முடிக்க வேண்டியுள்ளது. விக்ரமுக்கு அண்மையில் தான் கொரோனா தொற்று ஏற்பட்டு மீண்டு வந்தார் அதனால், அடுத்து விரைவில் பொன்னியின் செல்வன் டப்பிங் பணிகளை விக்ரமும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…