பொன்னியின் செல்வன் பின்விளைவுகள்.! சோழனின் பயணத்தை தொடர்ந்த ஆந்திரவாசிகள்…
‘பொன்னியின் செல்வன்’ படத்தை பார்த்துவிட்டு சோழர்கள் வாழ்ந்த இடங்களை பார்வையிடுவதற்காக ஆந்திர புகைப்பட கலைஞர்கள் தமிழ்நாடு வந்துள்ளார்கள்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை குவித்து வருகிறது. கல்கி எழுதிய நாவலை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது என்றே கூறலாம்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மனோஜ்குமார் வெங்கடேஷ், தினேஷ்குமார், லோகேஷ் என்பவர்கள் தங்களுடைய பட்டப்படிப்பு முடித்து விட்டு புகைப்பட கலைஞர்களாக பணியாற்றி வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- வாய்ப்பு இல்லாத நேரத்தில் இப்படியா செய்வீர்கள்..? மிகப்பெரிய படத்தை நிகாரித்த கீர்த்தி சுரேஷ்.!
கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் படத்தை (தெலுங்கு) பார்த்துவிட்டு இவர்கள் வியந்துபோய், படத்தில் வரும் சோழர்களின் நகரங்களான தஞ்சாவூர், கும்பகோணம், காஞ்சீபுரம், வீராணம் உள்ளிட்ட இடங்களை நேரில் காண முடிவு செய்து தமிழ்நாடு வந்துள்ளார்கள்.
இவர்கள் அனைவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வந்துள்ளார்கள். கும்பகோணம் அருகே உள்ள சோழன் மாளிகை, ராஜராஜ சோழனின் சகோதரியான குந்தவை வாழ்ந்த கீழப்பழையாறை, ஆரியப்படை வீடு உள்ளிட்ட இடங்களுக்கு இவர்கள் சென்று பார்வையிட்டனர். மேலும் இவர்கள் 15-ஆம் தேதி கன்னியாகுமரியில் தங்களுடைய பயணத்தை முடிக்கவுள்ளனர்.