70 வருடங்களுக்கு முன்பு எழுத்தாளர் கல்கி எழுதி பத்திரிக்கையில் வெளிவந்த புகழ்பெற்ற சரித்திர நாவல் “பொன்னியின் செல்வன்”. இந்த நாவலை இயக்குனர் மணிரத்தினம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், சரத்குமார், பிரபு, ஜெயராம், ரகுமான் உள்ளிட்ட பலர பிரபலங்கள் இந்த படத்தில் ஒவ்வொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். 500 கோடி பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு,கன்னடம், ஹிந்தி, மலையாளம், ஆகிய 5 மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
உலகம் முழுவதும் 5600 திரையரங்குகளிலும் தமிழகத்தில் 600 திரையரங்குகளுக்கும் மேல் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பையும், நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் படத்தின் முதல் பாகம் சூப்பர் இரண்டாம் பாகத்திற்கு வெயிட்டிங் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்- படப்பிடிப்பில் சண்டையிட்டுக்கொண்ட நானே வருவேன் பிரதர்ஸ்.. வெளியான தனுஷ் – செல்வா சீக்ரெட்ஸ்.!
வரவேற்பு ரீதியாக நல்ல வெற்றிகிடைத்து வரும் நிலையில் , வசூல் ரீதியாக படம் பல சாதனைகளை படைத்தது வருகிறது. இந்த நிலையில், தற்போது படம் வெளியான நாளிலிருந்து நேற்று வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, படம் 200 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…