இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் ஏப்ரல் 28, 2023 அன்று திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அப்போது படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது.
தற்போது, இந்த பிரம்மாண்ட திரைப்படம் அமெரிக்காவில் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகிறதாம், இந்தியாவில் சொன்னப்படி, ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் நிலையில், அங்கு ஒரு நாள் முன்னதாகவே வெளியாக இருக்கிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு வரும் 14ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக் அறிவித்துள்ளது.
இரண்டாம் பாகத்தில் நடிகர்களான சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஷோபிதா துலிபாலா, ஜெயராம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், அஷ்வின் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…