பொங்கல் கொண்டாட்டம் : 150 கோடி வசூலை அள்ளிய ‘துணிவு -வாரிசு’.!

Default Image

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு விஜய் நடித்த “வாரிசு” திரைப்படமும் அஜித் நடித்த “துணிவு”  திரைப்படமும் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி ஒரே தினத்தில் திரையரங்குகளில் வெளியானது.  இரண்டு படங்களுமே ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

Varisu vs Thunivu Box Office
Varisu vs Thunivu Box Office [Image Source : Twitter ]

விமர்சனம் ரீதியாக ஒரு பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கடந்த 3 நாட்கள் பொங்கல் விடுமுறை முன்னிட்டு இரண்டு படங்களின் வசூல் தாறுமாறாக எகிறி  உள்ளது. அதன்படி, இரண்டு திரைப்படங்களும் வெளியான 6 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது.

Varisu 150 cro
Varisu 150 cro [Image Source : Google]

வாரிசு திரைப்படம் தமிழகத்தில் 70 கோடி வசூல் செய்துள்ளதாகவும், உலகம் முழுவதும் 150 கோடி வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை படத்தை தமிழகத்தில் வாங்கி வெளியிட்ட 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

Thunivu
Thunivu [Image Source : Twitter ]

இதைப்போலவே, துணிவு திரைப்படம் தமிழகத்தில் 73 கோடி வசூல் செய்துள்ளதாகவும், உலகம் முழுவதும் 150 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கவில்லை, மேலும், வாரிசு படம் 5 நாட்களில் 150 கோடியும், துணிவு 6 நாட்களில் 150 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்