பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் நாட்டில் பெரும் அச்சத்தில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனங்களையும் ,போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது பல பிரபலங்களும் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது அறம் பட இயக்குநர் கோபி நயினார் இந்த சம்பவத்தை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டார்.
அதில் அவர் பேசுகையில் ,பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை எதிர்த்து போரட்டங்களை நியாயப்படி அரசும், காவல்துறையும் தான் முன்னெடுத்திருக்க வேண்டும். இந்த சம்பவத்தை எதிர்த்து போராடுகிற மக்களை தமிழக அரசு ஒடுக்கி வருகிறது.
எல்லா குற்றங்களுக்கும் தண்டனை கிடைக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன தீர்வு கிடைக்கும் என்பது தான் நம்முடைய கேள்வி. இது போன்ற குற்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதுதான் இது போன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் நீதி. மேலும் இந்த கொடுங்குற்றத்திற்கு தண்டனை போதாது தீர்வு வேண்டும் பொள்ளாச்சி பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் இயக்குநர் கோபி நயினார் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…