அரசியல் கட்சி தொடக்கம்: சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுப்பேன் – விஷால் அறிக்கை.!
இயற்கை வேறு ஏதேன்னும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார். இவர், கட்சியை தொடங்கியதை அடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஷாலும் கட்சி தொடங்க தயாராகி உள்ளதாக ஒரு தகவல் கடந்த சில நாட்களாக வெளியான வன்னம் உள்ளது.
முன்னதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பிய விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி ஆகி விட்டது. இப்பொது, தனது ரசிகர் மன்ற பெயரையும் ‘விஷால் மக்கள் நல இயக்கம்’ என மாற்றி பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில், விரைவில் கட்சியின் பெயரை அறிவித்து 2026 தேர்தலில் போட்டியிடுவார் என கிசுகிசுக்கப்பட்டது.
அந்த வகையில், இன்று காலை 10 மணிக்கு கட்சி பெயர் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளாகவும் தகவல் வெளியானது. அதன்படி, நடிகர் விஷால் அரசியல் கட்சி துவங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் உலா வந்த நிலையில், விஷால் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
விஜய் அரசியல் பயணம்: முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு.!
சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுப்பேன் என்று அரசியல் கட்சி தொடக்கம் குறித்து நடிகர் விஷால் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை குறிப்பில், என்னுடைய ரசிகர் மன்றத்தை ஒரு சராசரி மன்றமாய் கருதாமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணினேன், “இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு” என்ற நோக்கத்தில் நற்பணி இயக்கமாக செயல்படுத்தினோம். அடுத்த கட்டமாக மக்களின் முன்னேற்றத்திற்க்காக மக்கள் நல இயக்கத்தை உருவாக்கி மாவட்டம், தொகுதி, கிளை வாரியாக மக்கள் பணிகளை மேற்கொள்ள போகிறேன்.
நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்தது இல்லை, “நன்றி மறப்பது நன்றன்று” என்ற வள்ளுவனின் வாக்குப்படி என்னால் முடிந்த உதவிகளை நாள் செய்துக்கொண்டே தான் இருப்பேன். அது என்னோட கடமை என்று மனரீதியாக நாள் கருதுகிறேன்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்ஐஏ அலுவலகத்தில் ஆஜர்..!
தற்போது மக்கள் நல இயக்கத்தின் மூலம் நாள் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.