தொடையில் வைத்து தங்கக் கட்டி கடத்தல்.. நடிகை ரன்யா ராவை 3 நாள் காவலில் எடுக்கும் போலீசார்.!

அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.2.67 கோடி ரொக்கம் மற்றும் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

ranya rao gold smuggling

பெங்களூரு : துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவு கடந்த 3ம் தேதி பெங்களூருவில் கைது செய்யபட்டார். சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.

அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பறிமுதல் செய்த பின்னர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) அதிகாரிகள் அவரைக் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போது, விசாரணைக்காக ரன்யா ராவின் மொபைல் போன் மற்றும் மடிக்கணினியை டிஆர்ஐ இப்போது கைப்பற்றியுள்ளது.

மேலும், அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.2.67 கோடி ரொக்கம் மற்றும் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் நடிகையுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் தங்கக் கடத்தல் நடவடிக்கையில் அவர்களுக்கு உள்ள தொடர்புகள் குறித்து அதிகாரிகள் இப்போது விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக, நடிகை விசாரணையின் போது தங்கக் கடத்தல் வழக்கில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்திருந்தார். பின்னர் அவர், தனது குற்றத்தை டி.ஆர்.ஐ முன் ஒப்புக்கொண்டார். இதனால், 14 நாட்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்படவிருந்த அவருக்கு மார்ச் 11 வரை (அதாவது) அவரது நீதிமன்றக் காவல் 3 நாட்களாக குறைக்கப்பட்டது.

விசாரணைக் காவல்

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வருவாய் புலனாய்வு
இயக்குநரகத்திற்கு (DRI) நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிபதி விஸ்வநாத் சி கவுடர் தலைமையிலான பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

27 முறை துபாய்

ரன்யா ராவிடம் வருவாய் புலனாய்வுத் துறை நடத்திய விசாரணையில், அவர் தங்கக் கடத்தலுக்காக ஓராண்டில் 27 முறை துபாய் சென்று வந்தது அம்பலமாகியுள்ளது. மேலும், தனது அனைத்து சர்வதேச பயணங்களையும் ஒப்புக்கொண்டார். அவர் துபாய்க்கு மட்டுமல்ல, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பயணம் செய்ததாகக் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்