பாமக மற்றும் வன்னியர் சங்கத்தில் இருந்து எதிர்ப்பு குரல்களை அடுத்து நடிகர் சூர்யா வீட்டின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் தான் தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாப்பிக். அவரை எதிர்த்து பாமகவினர், வன்னியர் சங்கத்தினர் பலர் குரல் எழுப்பி வரும் நிலையில், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் தங்கள் ஆதரவை சூர்யாவிற்கு தெரிவித்து வருகின்றனர்.
பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி என்பவர், நடிகர் சூர்யாவை தாக்கினால் 1 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியது. குறிப்பிட்ட திரையரங்கில் சூர்யாவின் பழைய திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் சிலர் அதனை அறிந்து திரையரங்கிற்கு சென்று தடுத்து நிறுத்தினர்.
இவ்வாறு பாமக தரப்பில் இருந்தும், வன்னியர் சங்கத்தில் இருந்தும் பலர் சூர்யாவிற்கு எதிராக குரல் எழுப்பி வருவதால், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிட கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடிகர் சூர்யா, மறைந்த ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு 10 லட்சம் வைப்பு நிதியாக வழங்கினார். அவரது 2டி தயாரிப்பு நிறுவனம் சார்பாக 5 லட்சம் வழங்கப்பட்டது. மொத்தம் 15 லட்சம் பார்வதி அம்மாள் கணக்கிற்கு வைப்பு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. அதில் இருந்து வரும் வட்டி மாத மாதம் பார்வதி அம்மாளுக்கு வரும் படி, வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…