இயக்குனர் தமிழ் அவர்களின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழகத்தில் உள்ள 43 காவலர் பயிற்சிப் பள்ளிகளும் திரையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் இந்த படம் திரையிடப்பட்ட பொழுது இயக்குனர் தமிழும் அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ், டாணாக்காரன் திரைப்படம் தமிழ்நாட்டில் இயங்கி கொண்டிருக்கும் 43 காவலர் பயிற்சிப் பள்ளிகளிலும் திரையிடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் படம் பார்த்துவிட்டு காவலர் பயிற்சி பள்ளியிலுள்ளவர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்ததாகவும், படத்தை திரையிடுவதற்கு ஆணை பிறப்பித்த காவலர் பயிற்சி துறை அலுவலர்களுக்கும், அசோக்நகர் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் அவர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கிருந்து கிளம்பும் பொழுது ஏன் இந்த படத்தை திரையிட செய்கிறீர்கள் என தான் கேட்டதாகவும், அதற்க்கு, எவ்வளவு கஷ்டம் வந்தாலும் மக்களுக்காக உழைக்கும் காவலர்கள் இந்த சிஸ்டத்திற்குள் வரவேண்டும் என நீங்க சொன்ன செய்தி இந்த பசங்களுக்கு போய் சேர வேண்டும் என காவல்துறை தலைவர் தன்னிடம் சொன்னதாகவும், அவர் அப்படி சொன்னது தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் டாணாக்காரன் திரைப்படம் யாரிடம் போய் சேர வேண்டும் என்று நினைத்தேனோ அவர்களிடம் போய் சேர்ந்து விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…