leo Kerala [File Image]
விஜய்யின் ‘லியோ’ வெற்றிவிழா நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
லியோ படம் தமிழகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில், லியோ படத்தின் பிரம்மாண்டமான வெற்றிவிழாவை நடத்த திட்டமிட்டுள்ள படக்குழு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நாளை (நவம்பர் 1ஆம் தேதி) கொண்டாட இருப்பதாகவும், அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவருகின்றனர்.
உலகம் முழுவதும் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், இந்த விழாவில் தளபதி விஜய் கலந்துக்கொள்ள உள்ளதாகவும், இதனால் இந்த விழாவுக்கு காவல்துறையின் பாதுகாப்பு கேட்டு லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்தில் கடிதம் கொடுத்திருந்தார்.
அதற்கு காவல்துறை தரப்பில் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், வெற்றி விழாவுக்கான ஏற்பாடுகள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, லியோ படத்தின் வெற்றி விழாக்கான டிக்கெட்கள், ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய படக்குழு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.
முன்னதாக, அதிகப்படியான ரசிகர்களுக்கு கூட்டங்களுக்கு பாஸ்கள் கொடுக்க முடியாத காரணத்தால், லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்வதாக, முன்பு தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்திருந்தார். இதனால், நாளை நடைபெறவுள்ள வெற்றி விழாவுக்கு ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்யும் முடிவால், ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், இந்த விழாவுக்கு தடையில்லா சான்றிதழ் தயாராகியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, விழா நடைபெறும் இடம் விளையாட்டு மேம்பாட்டு மையத்திற்கு சொந்தமானது என்பதால் தடையில்லா சான்றிதழ் அவசியம் தேவை. இந்நிலையில், காவல்துறை சார்பில் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் வருவாரா?
ஒரு பக்கம், காவல்துறையினர் அனுமதி வழங்கினாலும் தளபதி விஜய் வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம், விஜய் தனது அடுத்த படமான தளபதி 68 திரைப்பட படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதனால், அவர் வருவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த படத்தின் கெட்டப் வெளியே தெரிந்து விடும் எனபதால், வருகிறாரா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
லியோ
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘லியோ’ திரைப்படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மன்சூர் அலிகான், கெளதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…