இயக்குனர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு!

மாமன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 5ம்

மாமன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியதாக இயக்குனர் பா.ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.கடந்த 5ம் தேதி கும்பகோணம் அருகே நினைவஞ்சலி கூட்டத்தில் பேசிய இயக்குனர் ரஞ்சித், ராஜராஜசோழன் ஆட்சி செய்த காலத்தில் தலித் மக்களிடம் இருந்து விளைநிலங்கள் பறிக்கப்பட்டாகவும் மேலும் 400 க்கும் மேற்பட்ட பெண்கள் விலை மாதர்களாக மாற்றப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளார்.இதற்கு, பலர் தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்த நிலையில் இந்து மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இயக்குனர் பா.ரஞ்சித் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு!