ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் நடனக் கலைஞர் அளித்த புகாரில் இயக்குநர் ஜானி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Jani Master

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். ஜானியிடம் உதவி நடன இயக்குனராக பணியாற்றி வரும் தன்னை வெளிப்புற படப்பிடிப்புகளில் பல தடவை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று புகார் மனுவில் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து, ஜானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தர். தற்பொழுது, ஹைதராபாத்  நர்சிங்கி போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்து ஜானி மாஸ்டரை கைது செய்ய தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டுள்ளது.

ஜானி மாஸ்டரை தேடும் பணி நான்கு தனிப்படைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. எது எப்படியிருந்தாலும் ஜானி மாஸ்டர் விரைவில் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

ஜனசேனா கட்சி அதிரடி அறிவிப்பு

நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்து அரசியல் பணிகளிலும் ஜானி ஈடுபட்டு வந்தார். பாலியல் புகாரை தொடர்ந்து ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி நீக்கப்பட்டு உள்ளார். ஜானி மீது போலீசில் வழக்குப்பதிவு செய்து இருப்பதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக ஜனசேனா அறிவித்து உள்ளது.

ஜானி மாஸ்டர்

தமிழ் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் ஜாளி இவர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம்’ படத்தில் இடம்பெற்ற ‘மேசும் கருக்காதா பெண்ணே பாடலுக்கு நடனம் அமைத்து தேசிய விருது பெற்றவர்.

விஜய்யின் ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’, ரஜினி யின் ‘ஜெயிலர்’ படத் தில் இடம்பெற்ற ஜானி ‘காவாலயா’ உள்படபல ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்