pls என்னை மன்னித்து ஆதரவளிக்கவும்! பார்வையாளர்களை நாய் என்று திட்டிய சாக்ஷி மன்னிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியை காணும் மக்களை நாய் என்று திட்டிய சாக்ஷி மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிரபல நடிகர் கமலஹாசனால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், ஏற்கனவே எலிமினேட் ஆன வனிதா வைல்ட் கார்ட் எண்ட்ரீயாகவும், அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் விருந்தினராகவும் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்தனர்.
அந்த சமயத்தில் போட்டியாளரான ஷெரீனுக்கு சாக்ஷி ஆறுதல் கூறும்போது , நாய்கள் ரோட்டுல குரைத்தால் அதை நீ பொருட்படுத்துறியா என்று நிகழ்ச்சியை காணும் மக்களை நாய் என்று திட்டினார். இதற்கு பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில் சாக்ஷி தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.அவரது பதிவில், அனைத்து பிக் பாஸ் பார்வையாளர்களுக்கும்…. எனது வார்த்தைகள் உங்கள் உணர்வை புண்படுத்தியிருக்கலாம் என்பதை நான் இப்போது புரிந்து கொண்டேன். அதற்காக நான் உண்மையிலேயே மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
. இது ஷெரினை ஆறுதல்படுத்த பயன்படுத்தப்பட்ட ஒரு பொதுவான பழமொழி, உங்கள் அனைவரையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல, எதிர்காலத்தில் நான் மிகவும் கவனமாக இருப்பேன் என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறேன்.
உங்கள் ஒவ்வொருவரையும் நான் நேசிக்கிறேன். நீங்கள் என் குடும்பத்தைப் போன்றவர்கள். அதனால் நான் தற்செயலாக தவறு செய்திருந்தால் pls என்னை மன்னித்து ஆதரவளிக்கவும் என்று தெரிவித்துள்ளார்.