“ப்ளீஸ் வெற்றிமாறன் என்ன வெச்சு ஒரு படம் பண்ணுங்க”…மேடையில் வாய்ப்புக்கேட்ட ஜூனியர் என்டிஆர்!
தன்னை வைத்து தமிழ் படம் செய்யுங்கள் அதனை தெலுங்கில் டப் செய்துகொள்ளலாம் என வெற்றிமாறனிடம் ஜூனியர் என்டிஆர் வாய்ப்புக்கேட்டுள்ளார்.

சென்னை : நாவலைத் தழுவி படங்களை இயக்கி தமிழ் சினிமாவை உயர்த்திக் கொண்டு இருக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் படங்களில் நடிக்கப் பெரிய பெரிய நடிகர்களும் விருப்பம் காட்டுவது உண்டு. குறிப்பாக, விஜய், கமல்ஹாசன், ராம்சரன், உள்ளிட்ட பிரபலங்கள் வெற்றிமாறனை நேரடியாக அழைத்து கதைகேட்டு அவருடைய இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
அப்படி தான் தற்போது பொது மேடையில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் வெற்றிமாறன் இயக்கத்தில் தான் நடிக்க ஆசைப்படுவதாக கூறி வெளிப்படையாக வாய்ப்பு கேட்டுள்ளார். அவர் நடித்துள்ள தேவாரா படம் வரும் செப்டம்பர் 27-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
அதில், கலந்துகொண்ட ஜூனியர் என்டிஆர் தமிழ் படத்தில் தான் நடிக்கவேண்டும் என்றும், அது வெற்றிமாறன் இயக்கத்தில் இருக்கவேண்டும் என்பதை வெளிப்படுத்தினார். தயவுசெய்து வெற்றிமாறன் சார் ஒரு தமிழ் படம் பண்ணலாம் அதனை தெலுங்கில் டப் செய்து கொள்ளலாம்” எனத் தனது ஆசையைக் கூறினார். இவர் பேசியவுடன் அரங்கமே அதிரியது என்றே கூறலாம்.
வெற்றிமாறன் இயக்கும் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்த காரணத்தால் அவருடைய இயக்கத்தில் நடிக்க ஜூனியர் என்டிஆர்க்கு ஆசை ஏற்பட்டுள்ளது. அதைப்போல, ஜூனியர் என்டிஆருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் இருப்பதால் தமிழிலும் ஒரு படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், ஏற்கனவே, வெற்றிமாறன் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து தமிழ்ப் படத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியான நிலையில், என்டிஆர் இப்படித் தெரிவித்துள்ளது ஒருவேளை இவர்களுடைய கூட்டணி இணைவது உண்மையாக இருப்பதால் தான் அவர் இப்படிப் பேசியிருக்கிறாரோ? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025
இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!
April 15, 2025
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025