தர்ஷா குப்தா : தனக்கு ரொமாண்டிக்கான மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை இருக்கிறது என்று தர்ஷா குப்தா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து அதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருடைய பெயர் மக்களுக்கு மத்தியில் தெரிய வந்தது. இதில் கிடைத்த வரவேற்பின் காரணமாக தான் தர்ஷா குப்தாவுக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்தது என்றே சொல்லலாம்.
நிகழ்ச்சிக்கு பிறகு ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட், ஆகிய படங்களில் நடித்தார். இருப்பினும், படங்களில் நடித்த பிறகு இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். படங்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்றாலும் கூட ஒரு பக்கம் அடுத்தடுத்து படங்களில் நடிக்க தர்ஷா குப்தா கமிட் ஆகி கொண்டு தான் இருக்கிறார்.
அந்த வகையில், தற்போது கூட மெடிக்கல் மிராக்கள் படத்தில் கூட நடித்து வருகிறார். இதற்கிடையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனக்கு நடிக்க விருப்பமான கதாபாத்திரம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய நடிகை தர்ஷா குப்தா ” எனக்கு சேதுபதி படத்தில் விஜய்சேதுபதிக்கு மனைவியாக ரம்யா நடித்த கதாபாத்திரத்தை போல படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது.
அந்த படத்தில் அவர் ரொம்பவே சூப்பராக நடித்து இருப்பார். ஒரு ரொமாண்டிக்கான மனைவி கதாபாத்திரத்தில் அவர் நடித்தது எனக்கு பிடித்து இருந்தது. அந்த படத்தில் வரும் காட்சிகள் மற்றும் பாடல்களை பார்க்கும்போது நான் இந்த படத்தில் நடித்து இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்று யோசித்து பார்ப்பேன். அந்த மாதிரி ஒரு ரோலில் நடிக்க தான் எனக்கு ஆசை இருக்கிறது.
ஆனால், எனக்கு வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் பெய் கதாபாத்திரம் அல்லது கர்ப்பிணி பெண் கதாபாத்திரம் என இப்படியான கதாபாத்திரங்களில் நடிக்க தான் வாய்ப்பு வருகிறது. யாரவது ப்ளீஸ் சேதுபதி படத்தில் வரும் ரொமாண்டிக்கான மனைவி ரோலை போல ஒரு ரோலில் நடிக்க வாய்ப்பு கொடுங்க” என்றும் நடிகை தர்ஷா குப்தா கேட்டுக்கொண்டுள்ளார்.
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…