தயவுசெஞ்சி இந்த மாதிரி கேள்வி கேட்காதீங்க..செம கடுப்பான ஷாருக்கான்.!
நடிகர் ஷாருக்கான் ட்வீட்டரிக்கு வந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இன்று ஷாருக்கான் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ட்வீட்டர் வாயிலாக பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் “உங்களுடைய குடும்பப்பெயர் கான். அதனால் தான் ஷாருக்கான் என வைத்துள்ளீர்களா..? என்பது போல கேள்வி கேட்டிருந்தார்.
இந்த கேள்வியால் சற்று கடுப்பான ஷாருக்கான் “உலகம் முழுவதும் எனது குடும்பம். குடும்பத்தின் பெயரிலிருந்து என்னுடைய பெயர் வரவில்லை. தயவு செய்து இந்த மாதிரி கேள்விகள் கேட்காதீர்கள் என பதில் அளித்துள்ளார்.
மேலும் ஒரு ரசிகர் தளபதி விஜய் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்டிருந்தார். அதற்கும் பதில் அளித்த ஷாருக்கான் ” அவர் மிகவும் இனிமையானவர் மற்றும் அமைதியானவர். எனக்கு அருமையான இரவு உணவையும் கொடுத்தார்” என கூறியுள்ளார்.
மேலும் நடிகர் ஷாருக்கான் தற்போது பதான் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் ஜனவரி 25 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து அவர் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.