இந்தியா முழுவதும் கொரானா பரவலின் தீவிரத்தை தடுப்பதற்காக இந்திய அரசு நாடு முழுவதும், 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் வெளியே செல்ல கூடாது என கூறியுள்ளார். பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து நடிகை த்ரிஷா கூறுகையில், ‘இந்த கொரோனா அல்லது ‘கோவிட் 19’ சீக்கிரமாக பரவக்கூடிய ஒரு வைரஸ். வெளியூர் அல்லது வெளிமாநிலங்களில் இருந்து தமிழ் நாட்டுக்குள் சமீபத்தில் வந்தவர்கள் தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இப்படி தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்வது உங்களை அவமானப்படுத்தவோ, தொந்தரவு செய்வதற்கோ இல்லை.
இது உங்களுடைய பாதுகாப்புக்காக மட்டும்தான். உங்கள் குடும்பத்தினர் பாதுகாப்புக்காவும், குடும்பத்தில் இருக்கும் சிறியவர்கள், வயதானவர்கள் பாதுகாப்புக்காகவும் மட்டும்தான். தயவுசெய்து அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறாதீர்கள். வீட்டில் இருங்கள். பாதுகாப்பாக இருங்கள். இதை எல்லோரும் ஒற்றுமையாக செய்தால்தான் இந்த கொரோனா வைரசை ஒழிக்க முடியும்.’ எனக் கூறியுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…