நடிகர் சிவகார்த்திகயேன், இசையமைப்பாளர் டி.இமான் இருவருக்கும் இடையே என்ன பிரச்சனை என்ற தெளிவான காரணம் இதுவரை வெளியாகாமல் இருக்கிறது. இருவரும் இன்னும் தங்களுக்கு இடையே என்ன பிரச்சனை என்பதனை பற்றி வெளியே சொல்லாமல் இருக்கிறார்கள். இமான் கூட பேட்டிகளில் தான் இனிமேல் சிவகார்த்திகேயனுடன் படம் செய்யமாட்டேன் அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக தெரிவித்து இருந்தார்.
இந்த ஜென்மத்துல சிவகார்த்திகேயனுடன் படம் பண்ணவே மாட்டேன்! இசையமைப்பாளர் டி.இமான் பரபரப்பு!
ஆனால், என்ன காரணம் என்று கேட்டதற்கு அதனை வெளியே சொல்ல முடியாது அது சொன்னால் என்னுடைய குழந்தைகளின் வாழ்கை பாதிக்கப்படும் என தெரிவித்து இருந்தார். அதன்பிறகு இசையமைப்பாளர் இமானின் முதல் மனைவி மோனிகா சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பேச, இமானின் விவாகரத்து பற்றி தான் சிவகார்த்திகேயன் – இமானுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது என்ற பேச்சு கிளம்பியது.
அதன்பிறகு இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட விவாகரத்து காரணம் இல்லை எனவும், டி.இமான் தன்னுடைய முதல் மனைவியான மோனிகாவை கடந்த 2020-ஆம் ஆண்டு தான் விவாகரத்து செய்தார். அதன்பிறகு கடந்த 2022-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு பிப்ரவரி மாதம் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
இமான் -சிவகார்த்திகேயன் விவகாரத்தில் புது திருப்பம்! மௌனம் கலைப்பாரா எஸ்கே?
எனவே, விவாகரத்து பிரச்சனையை வைத்து ஏதேனும் சிவகார்த்திகேயன் துரோகம் செய்திருந்தால் எப்படி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து இருப்பார் என்று ரசிகர்கள் கேள்வியும் எழுப்பினார்கள். இருப்பினும் இன்னும் சிவகார்த்திகேயன் இது பற்றி விளக்கம் கொடுத்த நிலையில், என்ன பிரச்சனை சிவகார்த்திகேயன் மீது தான் தவறு உள்ளதா என்றும் குழப்பம் இருக்கிறது.
இந்த நிலையில், டி.இமானிடம் சிவகார்த்திகேயன் அந்த வீடியோவை டெலிட் செய்ய சொல்லி கெஞ்சியுள்ளாராம். அந்த வீடியோ இருப்பது மிகவும் அசிங்கமாக இருப்பதாகவும் நான் உங்களுடைய காலில் கூட விழுகிறேன் என சிவகார்த்திகேயன் இமானிடம் கூறியதாகவும் பிரபல நடிகரான பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் டி.இமான் இவ்வளவு நல்ல மனிதரா? குட்டி பத்மினி சொன்ன தகவலை கேட்டு கண்கலங்கும் ரசிகர்கள்!
இதனை டி.இமானே தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். மேலும் டி.இமானிடம் சிவகார்த்திகேயன் கெஞ்சினாரா அப்படி கெஞ்சவில்லையா அல்லது துரோகம் செய்தாரா இல்லையா என எதை பற்றியும் சிவகார்த்திகேயன் பேசாமல் இருப்பது ஏன்? எனவும் பயில்வான் ரங்கநாதன் கேள்வியும் எழுப்பி இருக்கிறார். விரைவில் இதை பற்றி சிவகார்த்திகேயன் பேசுவாரா இல்லையா என்பதை பற்றி பார்க்கலாம்.
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…