Velmurugan : சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரியை தாக்கிய புகாரில் பாடகர் வேல்முருகன் கைது.
தமிழ் சினிமாவில் பல ஹிட் படைகளை பாடி இருக்கும் பிரபலமான பாடகர் வேல் முருகன் மெட்ரோ ரயில் அதிகாரியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் காரில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலை வழியாக சென்று கொண்டு இருந்த சமயத்தில் அப்போது அங்கு மெட்ரோ பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காரணத்தால் இரும்பு தடுப்பு வைத்து சாலை அடைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், அந்த வழியாக செல்ல பாடகர் வேல் முருகன் முயற்சி செய்த நிலையில், அங்கு பணியில் இருந்த துணை மேலாளர் வடிவேலு என்பவர் இந்த பகுதியில் செல்ல முடியாது மெட்ரோ பணிகள் நடைபெற்றுக் கொண்டி இருக்கிறது என்று கூறி கண்டித்தாராம். இதனால் பாடகர் வேல் முருகனுக்கும் அவருக்கும் இடையே வாக்கு வாதம் நடைபெற்றதாம்.
பின் ஒரு கட்டத்திற்குமேல் ஆத்திரம் அடைந்த பாடகர் வேல் முருகன் அதிகாரியை தாக்கிவிட்டு, ஆபாச வார்த்தைகளை பேசிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, விருகம்பாக்கம் போலீஸில் வேல் முருகன் மீது அந்த அதிகாரி புகார் அளித்தார். இதன் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபல பாடகர் வேல்முருகனை இன்று கைது செய்தனர்.
ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேல் முருகனை கைது செய்த நிலையில், விசாரணை மேற்கொண்டு இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து, எழுதி வாங்கி ஜாமீனில் விடுதலை செய்தனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…