பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (04.02.2023) காலமானார்.
பாடகி வாணி ஜெயராம் தமிழில் 1973-ல் ‘தாயும் சேயும்’ என்ற படத்தில் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து , “நித்தம் நித்தம்”, “நெல்லு சோறு” , மல்லிகை என் மன்னன் மயங்கும் உள்ளிட்ட 10.000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர்.
இவர் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதையும் மூன்று முறை பெற்றவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, இந்தி, கன்னடம், மலையாளம், அசாமி, பெங்காலி, ஓடியா என 19-மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில், 78-வயதாகும் இவர் இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் வாணி ஜெயராம் இறந்துகிடந்துள்ளார். வீட்டுக்குள் நடந்து சென்றபோது வழுக்கி விழுந்து உயிரிழந்தாரா என ஆயிரம் விளக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவருடைய திடீர் மறைவு திரைத்துறையில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமாபிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மேலும் அண்மையில் குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசால் வாணி ஜெயராம்க்கு ‘பத்ம பூஷன்’ விருது அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…