மீண்டும் வெடிக்கிறது ‘தி கேரளா ஸ்டோரி’ சர்ச்சை…பினராயி விஜயன் கடும் கண்டனம்!

The Kerala Story - Kerala cm

The Kerala Story: தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்ப கேரள முதல்வர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில், கேரளாவைச் சேர்ந்த 32,000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, தீவிரவாதிகளாக மாறி, இந்தியாவிலும் உலகிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக படத்தின் ட்ரெய்லர் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் தூர்தர்ஷன் என்ற டிவியில் இன்று இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், “அரசு தொலைக்காட்சி, பாஜக – ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் பிரசார இயந்திரமாக மாறக்கூடாது. வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை கேரளா ஒருபோதும் அனுமதிக்காது.

தனது கண்டனத்தை தெரிவித்ததோடு, ‘மக்களவை தேர்தலுக்கு முன்னதாக இது பதட்டங்களை அதிகப்படுத்தும்” என்று கூறி, சர்ச்சைக்குரிய திரைப்படத்தை திரையிடுவதில் இருந்து விலகுமாறு” அந்த டிவி ஒளிபரப்பாளரைக் கேட்டுக் கொண்டார்.

படத்தின் டிரெய்லரில் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் புண்படுத்தும் வகையில் காட்சிகள் எதுவும் இல்லை என்று கூறி, படத்தை வெளியிட தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு மறுத்துவிட்டது. 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு எதிராக சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸால் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk