துப்பாக்கி வைத்திருக்கும் கையில் பான் மசாலா வைத்திருந்த ஜேம்ஸ்பாண்ட் நடிகருக்கு நோட்டீஸ்!
டெல்லி அரசு பான் மசாலா விளம்பரப் படத்தில் நடித்த ஜேம்ஸ்பாண்ட் நடிகர் பியர்ஸ் பிராஸ்னனுக்கு( pierce brosnan) சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆனால் பான் மசாலாவில் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அதனை பான் மசாலா நிறுவனம் மறைத்து விட்டது என்றும் பியர்ஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டிருப்பதாக டெல்லி கூடுதல் சுகாதாரத் துறை இயக்குனர் அரோரா தெரிவித்துள்ளார். இதுபோன்ற விளம்பரங்களில் இனி நடிக்கப் போவதில்லை என்றும் ஹாலிவுட் நடிகர் சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.