வெளியான இரண்டு நாளில் பிச்சைக்காரன் 2 வசூல் இத்தனை கோடியா.?
பிச்சைக்காரன் 2 படத்தில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி தானே ஹீரோவாக நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படம் வெளியான பிறகு திரையரங்குகளில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இப்படம் 2014ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் ஒரே நாளில் ரூ.8 கோடி வசூலித்ததாக படக்குழு நேற்று அறிவித்தது. அதன்படி, தமிழில் “பிச்சைக்காரன் 2” படம் ரூ.3.25 கோடியும், தெலுங்கில் “பிச்சகாடு 2” ரூ.4.5 கோடியும் வசூலித்ததாக நடிகர் விஜய் ஆண்டனி போஸ்டரைப் பகிர்ந்து கொண்டார்.
????BLOCKBUSTER???? pic.twitter.com/oZcT5gHED6
— vijayantony (@vijayantony) May 20, 2023
தற்போது, இப்படம் இரண்டு நாட்களில் ரூ.15 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வார இறுதி நாளான இன்று ரசிகர்கள் திரையரங்குகளில் குவியுவது வழக்கம். இதனால், இன்றும் இதன் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளி கிழமை வெளியான இப்படம் ரூ.8 கோடியாக இருந்த நிலையில், நேற்று சனிக்கிழமை என்பதால் ரூ.15 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.