நடிகர் சூர்யாவை திருமணம் செய்ய ஆசைப்படும் பிக்பாஸ் பிரபலம் !!!
நடிகை யாஷிகா ஆனந்த் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ்2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்பு சமீபத்தில் வெளி வந்த’ இருட்டு அறையில் முரட்டு குத்து ‘என்ற படத்தின் மூலம் கவர்ச்சி நடிகையாக சினிமாவில் அறிமுகம் ஆனார். தற்போது இவர் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இவர் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை யாஷிகாவிடம் , நடிகர் சூர்யா ரசிகர் ஒருவர் உங்களுக்கு சூர்யாவை பிடிக்குமா என்று கேள்வி கேட்டுள்ளார். இதற்கு நடிகை யாஷிகா நான் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறியுள்ளார்.
நடிகர் சூர்யாவிற்கும், ஜோதிகாவிற்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகை யாஷிகா இவ்வாறு பேசி இருப்பது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. இவரின் இந்த சர்ச்சையான பேச்சை ரசிகர்கள் பலரும் கடுமையாக விமர்ச்சித்து வருக்கின்றனர்.