புது அவதாரம் எடுத்த பிக்பாஸ் ஆரவ்….!!!
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக 2 சீசன்களாக நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் அனைவரும் மிகவும் பிரபலமாகினர்.
இந்நிலையில், பிக்பாஸ் ஆரவ் நாம் அனைவரும் அறிந்த ஒரு பிரபலம் தான். இவர் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். ஆரவ் தற்போது ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.
ஆரவ் ராஜபீமா படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் வேலைகள் மிக விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. இந்த படத்தில் இவர் ஒரு பாடல் பாடியுள்ளாராம். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.