HBDNayanthara [File Image]
ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் அறிமுகமான நடிகை நயன்தாரா, இப்போது லேடி சூப்பர் ஸ்டாராக திரையுலகில் வளம் வருகிறார். இவர் சந்திரமுகி, வல்லவன், யாரடி நீ மோகினி, வில்லு, ஆதவன், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களின் மூலம் இளைஞர்கள் மனதில் தீராத இடம்பிடித்தார்.
தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்த நிலையில், கோலமாவு கோகிலா, காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் ஆகிய திரைப்படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். இதன்பிறகு, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவிற்கும் இடையே மலர்ந்த காதல் திருமணத்தில் முடிந்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்ட இவர்கள், வாடகை தாய் மூலம் 2 குழந்தைகளைப் பெற்று கொண்டார்கள். இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு ‘உயிர் ருத்ரோனில் என் சிவன்’ எனவும், மற்றோரு குழந்தைக்கு ‘உலக் தைவிக் என் சிவன்’ எனவும் பெயர் வைத்தனர்.
தற்போது நவம்பர் 18ம் தேதி பிறந்த நயன்தாரா, இன்று அவரது 39வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைத்துத் தரப்பிலிருந்தும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கும் வேளையில், அவரது கணவர் விக்னேஷ் சிவனிடமிருந்து அழகான வாழ்த்து கிடைத்துள்ளது.
விக்னேஷ் சிவன் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நயன்தாரா மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் தங்கமே” என்று பதிவிட்டுள்ளார். இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் இப்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…