முக்கியச் செய்திகள்

சிகப்பு உடையில் சிக்கென்னு இருக்கிங்க..! காஜல் அகர்வால்-ன் கியூட் கிளிக்.!

Published by
செந்தில்குமார்

ஹோ கயா நா என்கிற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகில் அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், 2008ம் ஆண்டு வெளியான பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சரோஜா, பொம்மலாட்டம் என்ன பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.

KajalAggarwal [Image source : X/@mskaajalagarwal]

ஆனால் அந்த திரைப்படங்களில் அவரது கதாபாத்திரங்கள் அவ்வளவாக பேசப்படவில்லை. இதை தொடர்ந்து நான் மகான் அல்ல திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் ஜோடியாக நடித்ததன் மூலம் இளைஞர்கள் மனதில் தீராத இடம் பிடித்தார். அதன்பிறகு துப்பாக்கி, ஜில்லா, மாரி, விவேகம் என பல திரைப்படங்களில் நடித்து இன்னும் பிரபலமானார்.

KajalAggarwal [Image source : X/@mskaajalagarwal]

இதற்கிடையில் படப்படிப்பு இல்லாத சமயங்களில் அடிக்கடி புகைப்படம் எடுத்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் கருப்பு நிற கோட் அணிந்து புகைப்படங்களை வெளியிட்டார் அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

KajalAggarwal [Image source : X/@mskaajalagarwal]

இதைத்தொடர்ந்து தற்பொழுது சிகப்பு நிற சுடிதார் அணிந்து பல அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அட்டகாசமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அழகு சிலை, ஏஞ்சல் என்று வர்ணித்து வருகின்றனர்.

KajalAggarwal [Image source : X/@mskaajalagarwal]

மேலும் இவர் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் மூன்றாவது பாகமும் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

கனமழை எதிரொலி : இந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…

22 mins ago

சீனாவில் பரபரப்பு! கூட்டத்தில் காரை ஏற்றி 35 பேரை கொலை செய்த நபர்!

சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…

11 hours ago

“காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பில்லை”…வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…

11 hours ago

நாளை வாக்குப்பதிவு எங்கெல்லாம்? : வயநாடு முதல் ஜார்கண்ட் வரை!!

டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…

11 hours ago

“நான் 30 நாள்…சிவா 90 நாள் தூங்கவில்லை”..கங்குவா குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா!!

மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும்…

12 hours ago

தமிழகத்தில் புதன்கிழமை (13/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…

12 hours ago