தளபதியை சந்தித்த தளபதி.! இணையத்தை தெறிக்கவிடும் புகைப்பட தொகுப்பு.!
நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கப்பட்டது.
இதற்கிடையில், நடிகர் விஜய் தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரத்தின் மகள் ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இந்த வரவேற்பு நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக சென்னையில் நடந்ததது.
அப்போது, விஜய் தனது 66-வது படத்திற்கான பூஜையை முடித்து விட்டு வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும் போது, அங்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் வருகை தந்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினும் நடிகர் விஜய்யுடன் ஒருவரையொருவர் பார்த்ததும் வணக்கம் சொல்லியபடியே சிரித்து கொண்டே வந்தனர். பின்னர் இருவரும் கை குலுக்கிக் கொண்டார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் தளபதியை சந்தித்த தளபதி என கூறிவருகிறார்கள்.