போட்டோசூட்டால் பிரபல நடிகையை தேடி வரும் பட வாய்ப்புகள்!

நடிகை ரம்யா பாண்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் சமீபத்தில் தனது வீட்டு மொட்டை மாடியில் வைத்து எடுத்த போட்டோ சூட் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த போட்டோ சூட்டுக்கு இவ்வளவு வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. இன்ஸ்டாவில் பலர் எனக்கு மெசேஜ் பண்ணினார்கள். சினிமாவிலும் பல பிரபலங்கள் போன் செய்து போட்டோஸ் நல்லா இருந்தது என கூறினார்கள் என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆன் தேவதை படத்திற்கு பின் சில பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், போட்டோ சூட்டுக்கு பின் தான் அதிகமான, நல்ல பட வாய்ப்புகள் வர துவங்கியுள்ளதாக கூறியுள்ளார். படங்களில் மட்டுமல்லாது வெப் சீரிஸிலும் நடிக்கவுள்ளதாகவும், படங்களுக்கு தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.