ஃபைட் இருக்கு..நடனமும் இருக்கு! கவனத்தை ஈர்க்கும் ‘பேட்ட ராப்’ டீசர்!

பேட்ட ராப் : இயக்குனர் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் நடிகரும், நடன இயக்குனருமான பிரபு தேவா நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் ‘பேட்ட ராப்’. இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி, ரியாஸ் கான், கலாபவன் ஷாஜோன். உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டிஇமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி எப்போது அறிவிக்கப்படும் என ஆராவதுடன் ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள்.
இந்த படத்திற்கான டீசர் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது டீசர் வெளியாகி உள்ளது. டீசரில் வரும் நடன காட்சிகள் மற்றும் சண்டைக்காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டிசருடன் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டீசரை பார்த்த பலரும் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். டீசரை பார்த்துவிட்டு நடன காட்சிகள் நன்றாக இருக்கிறது. கண்டிப்பாக ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025