வீரியம் தெரியாமல் விளையாடும் மக்கள்! இரண்டு வாரம் குடும்பத்துடன் இருங்கள்! – நடிகர் டேனியல் பாலாஜி
கொரோனா என்றாலே, இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பலரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதுகுறித்து பல பிரபலங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் டேனியல் பாலாஜி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்கள் விளையாட்டாக எடுக்க கூடாது. வீரியம் தெரியாமல் விளையாடும் மக்கள். இரண்டு வாரம் குடும்பத்துடன் இருங்கள். இவ்வளவு நாள் உழைத்த நீங்கள் இளைப்பாருங்கள். 2 வாரம் வீடு நலம். நாடு நலம் கொரோனாவை வென்றிடுவோம்.’ என பதிவிட்டுள்ளார்.