தங்கம் வென்ற மாணவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த மக்கள் செல்வன்!
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதியை பொறுத்தவரையில், சினிமாவில் மட்டுமே தனது கவனத்தை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில், உலக காது கேளாதோருக்கான பேட்மிட்டன் போட்டியில் காரைக்குடியை சேர்ந்த ஜெர்லின் என்ற மாணவி தங்க பதக்கம் வென்றுள்ளார். இதனையடுத்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவரை நேரில் சந்தித்து ஜெர்லினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.