சிறந்த நடிகராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தேர்வு!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில்வெளியாகி பல சாதனைகளை 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்தில், திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்ததற்காகாக இவருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்ற இந்திய திரைப்பட விழாவில் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.