மறைந்தும் மனதில் வாழும் மயில்சாமி…நினைவுகூர்ந்த சாலிகிராம மக்கள்.!
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் சென்னை புறநகர் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். வர்களை மீட்கவும், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கவும் அரசு மட்டுமல்லாது, பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்களும் களப்பணி ஆற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது எல்லாம், முதல் ஆளாய் களத்தில் நிற்பவர் நடிகர் மயில்சாமி. அவர் குடியிருந்த சாலிகிராம் பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். தற்பொழுது, வெள்ளத்தில் சென்னை தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில், மறைந்த நடிகர் மயில்சாமியை சாலிகிராம் சுற்றுவட்டார பகுதி மக்கள் கண்ணீருடன் நினைவு கூறுகின்றனர்.
அதுபோன்று மக்களுக்கு சேவையாற்றும் நாயகன் தற்போது இல்லையே என, அவரின் பழைய புகைப்படங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இவரது இறப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன்!
1984இல் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த மயில்சாமி இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அதில் கமலின் அபூர்வ சகோதரர்கள் ரஜினிகாந்தின் பணக்காரன் கில்லி, தூள் உள்ளிட்ட பல படங்கள் அவரது திரை வாழ்க்கையில் முக்கிய படங்களாக அமைந்தன.