ரிலீஸிற்கு முன்பே ‘சூர்யா 42’ இத்தனை கோடிக்கு வியாபாரமா..? வெளியான ஆச்சரிய தகவல்..!
‘சூர்யா 42’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் அதற்குள் 100 ரூபாய்க்கு வியாபாரம் ஆகி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக “சூர்யா42” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் யூவி கிரியேஷன் இரண்டு நிறுவனமும் இணைந்துபிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.
படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். படத்திற்கான மோஷன் போஸ்டர் கூட கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதிருந்த எதிர்பார்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
இதையும் படியுங்களேன்-
படத்தில் யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகும் இப்படம் மொத்தம் 10 மொழிகளில் தயாராகி வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில், படம் குறித்த ஒரு ஆச்சரிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அது என்னவென்றால், இந்த திரைப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை, இந்தி திரையரங்கு உரிமையை பிரபல நிறுவனமான பென் ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளதாகவும், இந்த உரிமை கிட்டத்தட்ட 100 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. வெளியாவதற்கு முன்பே 100 கோடிக்கு ‘சூர்யா 42’ திரைப்படம் வியாபாரம் ஆகியுள்ளது தமிழ் சினிமாவையே மிரள வைத்துள்ளது.