நடுரோட்டில் விஜய் பேனரை வைத்து பால் அபிஷேகம் செய்த தளபதி ரசிகர்கள் வைரலாகும் வீடியோ
நடிகர் அஜித்தின் பிறந்த நாளான நேற்று முன்தினம் அஜித்திற்கு பல பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் அஜித் ரசிகர்கள் ஒரு பக்கம் அவரது பிறந்தநாளை வெகுவாக கொண்டாடினர்.
இன்னொருபக்கம் தளபதி ரசிகர்கள் திண்டுக்கல் அருகே உள்ள ஓட்டச்சத்திரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் “தெறி” திரைப்படத்தை மீண்டும் திரையில் வெளியிட்டு பிரமாண்டமாக கொண்டாடினர்.
அப்போது தளபதி ரசிகர்கள் சிலர் நடு ரோட்டில் விஜய் அவர்களின் பேனரை வைத்து பால் அபிஷேகம் செய்து உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/ghillisuresh_22/status/1123770992529215489