ஒரே நாளில் இத்தனை கோடியா..? வசூலில் அதிரடி காட்டிய “பத்து தல”.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
சிம்பு நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பத்து தல திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் 1,200 திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கௌதம் மேனன் , கலையரசன், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. நேற்று வெளியான இந்த படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படம் பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
விமர்சன ரீதியாக மட்டுமின்றி படம் வசூல் ரீதியாகவும் நல்ல ஓப்பனிங்கை பெற்றுள்ளது. இந்நிலையில், படம் முதல் நாளில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பதை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
A working day release & no early morning shows, yet our #AGR #PathuThala registers a record opening! #Atman @SilambarasanTR_ career best numbers.#PathuThalaBlockBuster@StudioGreen2 @PenMovies @Gautham_Karthik @arrahman@nameis_krishna @NehaGnanavel @Dhananjayang @digitallynow pic.twitter.com/JfUJFFTTsO
— Studio Green (@StudioGreen2) March 31, 2023
அதன்படி 40 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 12.3 கோடி வசூல் செய்துள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. சிம்புவின் சினிமா கேரியரில் சிறந்த ஓப்பனிங் கொடுத்த படமாக இந்த படம் மாறியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாளில் இன்னும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.