நடிகர் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகிறார்கள்.
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஷாரூக்கானுடன் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிரடி ஆக்சன் த்ரில்லர் படமான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
பதான் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அதன்படி, படம் வெளியான 6 நாட்களில் உலகம் முழுவதும் 593 கோடி வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பதான் படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், நேற்று ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கான்,தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். விழாவில் கலந்து கொண்ட ஷாருக்கான் ஜான் ஆபிரகாமை முத்தமிட்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் ஷாருக்கான் ஜான் ஆபிரகாமிற்கு முத்தம் கொடுத்ததற்கு ஜான் ஆபிரகாம் சிரித்துக்கொண்டே, “முதல் தடவை…நான் வெட்கப்படுகிறேன் என தெரிவித்தார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கிற்கு ‘கிட்டத்தட்ட முத்தமிட்டேன்’ என்று நகைச்சுவையாக கூறினார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…