ஷாருக்கான் நடித்த ‘பதான்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று திரையரங்களில் வெளியானது. அதிரடி ஆக்சன் த்ரில்லர் படமான இந்த படத்தை இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தில் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கான் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது என்பதால் படத்தை ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். படமும் அருமையாக இருப்பதால் படத்தை பார்த்த பலரும் சூப்பர்…கண்டிப்பாக பிளாக் பஸ்டர் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில், படம் வெளியான முதல் நாளில் மட்டும் இந்தியாவில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 54 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
மேலும், உலகம் முழுவதும் பதான் திரைப்படம் வெளியான 1 நாளில் 100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தி திரையுலகில் இது மிகப்பெரிய சாதனை என்றும் சொல்லப்படுகிறது. வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்திற்கான வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மேலும் படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…
சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…
சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…