சிறகடிக்க ஆசை இன்று -சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான[ ஜூலை 10]விறுவிறுப்பான கட்சிகளை இங்கே காணலாம்.
விஜயாவிடம் அண்ணாமலை நகை எப்படி மாறியது என்று விசாரிக்கிறார். அதற்கு விஜயா சொல்றாங்க.. அப்போ இத்தனை நாளா என்கிட்ட கவரிங் நகை தான் கொடுத்து வைத்திருந்தீர்களா அப்படின்னு கேக்குறாங்க. உடனே ரவி சொல்றாரு இது கவரிங் நகையாக இருந்தால் அண்ணி ஏன் கடைக்கு எடுத்துட்டு போறாங்க அப்படின்னு கேக்குறாங்க..
ரோகிணி சொல்றாங்க.. முத்து திட்டுவார்னு கூட சொல்லாம இருந்திருக்கலாம் அப்பவே எனக்கு சந்தேகம் இருந்துச்சு பூக்கட்டி எப்படி கார் வாங்க முடியும் அப்படின்னு.. இதுக்கு உடனே முத்து சொல்றாரு ..என் பொண்டாட்டி சம்பாரிச்சு தான் எனக்கு கார் வாங்கி கொடுத்தா. திருட்டு வேலை பார்க்கிறது பிராடுவேல பாக்குறதுக்குனே ஒருத்தன் இருக்கிறான் அப்படின்னு மனோஜ் சொல்றாங்க.
அதுக்கு மனோஜ் சொல்றாரு டேய் தேவையில்லாம என்னை இழுக்காதே அப்படின்னு சொல்றாரு. இப்போ விஜயா சொல்றாங்க.. ஏன் மீனாவோட தம்பி திருடிட்டு ஜெயிலுக்கு போனவன் தானே அவன் கூட இதை பண்ணி இருக்கலாம்ல . அதுக்கு அண்ணாமலை சொல்றாரு.. ஒரு தப்பு பண்ணிட்டான் அதோட அவன் இப்ப படிச்சிட்டு இருக்கிறான். இப்போ முத்து அப்படிப் பார்த்தால் நம்ம வீட்ல 27 லட்சத்தை எடுத்துட்டு ஓடினவன் இருக்கான் அப்படின்னு மனோஜை டார்கெட் பண்றாரு.
அதுக்கு ரோகினி அவரு இப்போ லட்சத்துல சம்பாதிச்சிட்டு இருக்குறாரு ஒரு பிசினஸ் மேன் அவர பத்தி பேசாதீங்கன்னு சொல்றாங்க. விஜயா சொல்றாங்க விடுமா அவங்க தப்பா திருப்பி விடலாம்னு பார்க்கிறார்கள் அப்படிங்கிறாங்க. அண்ணாமலை சொல்றாரு கல்யாணத்துக்கு அந்த நகையை போட்டதே எங்க அம்மா தான் . அதுக்கு விஜயா அவங்களும் கவரிங் நகையை போட்டாங்களா என்னமோ .
விஜயா நாக்கு இருக்குதுன்னு என்ன வேணாலும் பேசாத எங்க அம்மா எல்லாருக்கும் அள்ளி அள்ளி கொடுக்குறாங்க அப்படின்னு சொல்றாரு அண்ணாமலை. உங்க அம்மா நகை செய்றவங்க கிட்ட கூட ஏமாந்து இருக்கலாம் இல்ல அப்படின்னு சொல்றாங்க .உடனே சுருதி என்ன இது லாஜிக்கே இல்லாம பேசுறீங்க ஃபர்ஸ்ட் மீனா வீட்ல சொன்னீங்க அப்புறம் பாட்டியே சொல்றீங்க அப்படின்னு கேக்குறாங்க. ரவி சொல்றாரு இது நம்ம வீட்ல தான் மாறி இருக்கு.
உடனே முத்து இத எப்படியாவது கண்டுபிடிப்பேன்னு சொல்றாரு. இப்போ விஜயா மனோஜா ரூம்ல கூப்பிட்டு போயிட்டு நீ பொறந்ததுல இருந்தே எனக்கு கஷ்டத்தை கொடுக்கிற. இப்ப வரைக்கும் என்னை கஷ்டப்படுத்திட்டே தான் இருக்கிற அப்படின்னு திட்டுறாங்க. எப்படியாச்சும் அந்த நகையை எனக்கு திருப்பி கொடுக்கிற வழியை பாரு அப்படிங்கிறாங்க.
இப்போ முத்து மீனா கிட்ட ஒரு ஐடியா கொடுக்கிறார்.. கண்டிப்பா இத மனோஜ் தான் பண்ணி இருப்பான் அந்த நகையை மாற்றுவதற்கு ஒரு நகைக்கடையில் தான் எடுத்திருப்பான் அங்கிருந்து பேசுற மாதிரி உண்மையை வரவைக்கணும் அப்படின்னு சொல்றாரு. உடனே அதுக்கு மீனா ஸ்ருதிய பேச வைக்கலாம் அப்படின்னு சொல்றாங்க ..இப்போ இரண்டு பேரும் ஸ்ருதியை பார்க்க கிளம்புறாங்க..
மனோஜூம் ரோகினையும் கடையில இருக்குறாங்க. இப்ப ரோகினிக்கு கால் வருது க்ரிஷ் கால் பண்ணி இருப்பாரு .சொல்லு செல்லம் அப்படின்னு சொல்லவும் மனோஜ் கேக்குறாரு என்ன மறுபடியும் செல்லம்மா பிரண்டா அப்படின்னு கேக்குறாரு. உடனே அவங்க தனியா போயிறாங்க. இப்ப மனோஜ்க்கு ஸ்ருதி வாய்ஸ் மாத்தி கால் பண்றாங்க ஹலோ சார் நாங்க ஜூவல்லரி ஷாப்பில் இருந்து பேசுரோம் அப்படின்னு பேச ஆரம்பிக்கிறாங்க.
நீங்க நகை எடுத்தீங்களே எங்ககிட்ட அதை பத்தின ஃபீட்பேக் சொல்லுங்க. அப்படின்னு சொல்லவும் ஃபர்ஸ்ட் மனோஜ் தயங்குறாரு.. அது நான் இல்ல அப்படின்னு சொல்றாரு அதோட இன்னைக்கு எபிசோடு முடிந்தது. நாளைக்கு ப்ரோமோல மனோஜ் சொல்லுறாரு நீங்க வேற யாருக்காவது கால் பண்ணி இருக்கீங்க அது நான் இல்ல அப்படின்னு சொல்லிட்டு கால கட் பண்ணிடுறாரு .
முத்து மீனா கிட்ட சொல்றாரு கண்டிப்பா இது பார்வதி அத்தைக்கு தெரியாம இருக்காது அம்மா வந்து எல்லாத்தையும் பார்வதியத்தை கிட்ட சொல்லுவாங்க. அவங்க கிட்ட நம்ம போலாம்னு அவங்க வீட்டுக்கு ரெண்டு பேரும் கிளம்பி போறாங்க. பாட்டியோட பிறந்தநாளுக்கு ரெட்டை வட செயின் எடுத்து கொடுக்கலாம்னு நகைக்கடைக்கு போனோம் அது முடியாம போயிருச்சு அப்படின்னு சொல்றாங்க.
அப்ப வேகமா பார்வதி அதான் கவரிங் நகையாச்சேனு .. உளறிறாங்க .அது உங்களுக்கு எப்படி தெரியும் அப்படின்னு கேக்குறாரு முத்து . இப்போ விஜயா அங்க வந்து பார்வதி அப்படின்னு சத்தம் போட்டு கூப்புடுறாங்க. நாளைக்கு ஆச்சும் உண்மை தெரிஞ்சிடுமான்னு பாக்கலாம்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…