பார்த்திபன் ஒத்தசெருப்பு படத்தை தொடர்ந்து அவரே இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘இரவின் நிழல்’. இந்த படம் 96 நிமிடங்கள் ஓடும் இப்படம், ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்றது. இதில் பார்த்திபன், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு படத்தின் முதல் பாடலை வெளியிட்டனர்.
அப்போது, இயக்குநர் பார்த்திபன் பேசத் தொடங்கினார். ஆனால் அவருடைய மைக் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை. இதனால் கோபமான பார்த்திபன் அந்த மைக்கை கீழே வீசி எறிந்தார். இதை எதிர்பார்க்காத ஏ.ஆர்.ரஹ்மான் அதிர்ச்சி அடைந்தார்.
அதன் பின் பேசிய பார்த்திபன், பொதுவாக நான் இந்த மாதிரி மேடைகளில் எமோஷனல்-ஆகி விடுவேன். ஏனென்றால், எல்லாம் சரியாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன். ஏ ஆர் ரகுமான் ஒரு சில்டு கொடுத்தார். அதை தூக்கும் போது எனக்கு கை கொஞ்சம் சுளுக்கு பிடித்துவிட்டது.
என்னால் வெளியில் கத்த முடியவில்லை. அந்த சமயம் பார்த்து மைக் வேலை செய்யவில்லை. அந்த கோபத்தில் நான் மைக்கை தூக்கி போட்டு விட்டேன். நான் செய்தது அநாகரிகமான செயல் தான். அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…