பார்ட் 2 சாபத்தை ஒழித்து கட்டிய ‘டிமான்டி காலனி 2’? பிளாக்பஸ்டர் கம்மிங்..!!

Published by
பால முருகன்

சென்னை : டிமான்டி காலனி 2 படத்தினைப் பார்த்த பிரபலங்கள் பலரும் படம் பயங்கர த்ரில்லாக இருப்பதாகப் பாராட்டி வருகிறார்கள்.

திகில் படங்களை விரும்பி பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாக இருக்கும் படம் என்றால் டிமான்டி காலனி தான். இந்த படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவிச்சந்திரன், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆக 15 -ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில், படத்தின் ப்ரீமியர் காட்சி பிரபலங்களுக்குப் போட்டுக்காட்டப்பட்டது. அதில் படத்தினை பார்த்த பிரபலங்கள் பலரும் படத்தைப் பற்றி தங்களுடைய விமர்சனங்களைத் தெரிவித்துப் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளனர்.

படத்தினை பார்த்துவிட்டு இயக்குனர் பாண்டிராஜ், “டிமான்டி காலனி 2 படம் மிகவும் ஈர்க்கப்பட்ட ஒரு நல்ல தொடரை வழங்கியுள்ளது. அருள்நிதிக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தின் மூலம் அவருக்குப் பட வாய்ப்புகள் குவியப்போகிறது. பிரியா பவானி சங்கர் படத்தில் நன்றாக நடித்துள்ளார். படத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் நன்றாக நடித்துள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.

அவரைப்போல, இயக்குனர் பரத் நீலகண்டன் ” பொறாமைப்படக்கூடிய திரைப்படத்தின் ஒரு பகுதியாக நான் இருந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அருள் நிதி மீண்டும் ஒருமுறை  டிமான்டி காலனி 2 உடன் இரட்டை திகில் மற்றும் கற்பனையுடன் வந்துள்ளார். படம் மிகவும் நன்றாக இருக்கிறது படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.  இவர்களைப் போல, கீர்த்தி பாண்டியன், வைபவ், அசோக் செல்வன் உள்ளிட்ட பலரும் படத்தினை பாராட்டி இருக்கிறார்கள்.

படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ள காரணத்தால் கண்டிப்பாகப் படம் மக்களுக்கு மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றியை பிளாக் பஸ்டர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக, இந்த படம் பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது என்றால் தமிழ் சினிமாவில் பார்ட் 2 சாபம் ஒழிக்கப்படும் என்றே சொல்லலாம்.

ஏனென்றால், தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒரு படத்தினுடைய இரண்டாவது பாகம் எடுத்தாலே அந்த படம் தோல்வி அடைந்து விடும் என்கிற வகையில் சாபம் இருப்பதாகப் பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே இதுவரை வெளியான பார்ட் 2 படங்கள் எல்லாம் முதல் பாகம் அளவுக்கு ஹிட் ஆகாமல் தோல்வி அடைந்து இருக்கிறது. குறிப்பாகக் கடைசியாக வெளியான இந்தியன் 2 படத்தினை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

இந்தியன் 2 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியைச் சந்தித்து இருந்தது. இந்தியன் 2 மட்டுமின்றி, விஸ்வரூபம் 2, சாமி 2, கலகலப்பு 2, சண்டக்கோழி 2 உள்ளிட்ட படங்கள் எல்லாம் தோல்வியைச் சந்தித்து இருக்கிறது. எனவே, டிமான்டி காலனி 2  படம் வெற்றி பெற்று இந்த சாபத்தைப் போக்கி ஹிட் படமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

51 mins ago

ஹெலிகாப்டர் செல்ல அனுமதி மறுப்பு! 1 மணி நேரம் காத்திருந்த ராகுல் காந்தி!

ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…

2 hours ago

கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி?. எளிமையான செய்முறை விளக்கங்கள்..

சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…

2 hours ago

300 கோடி வசூலை நெருங்கும் அமரன்…எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…

2 hours ago

“பேச்சுவார்த்தை நடத்துங்கள்.!” ஜெயம்ரவி விவகாரத்து வழக்கில் நீதிமன்றம் ஆணை.!

சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…

3 hours ago

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கிண்டி மருத்துவமனை! இளைஞர் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…

4 hours ago