பார்க்கிங் விவகாரம் : பிக் பாஸ் தர்ஷன் அதிரடி கைது!
தர்ஷன் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் ஜேஜே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. பிக் பாஸ் தர்ஷன் நேற்று (ஏப்ரல் 03, 2025) மாலை ஜிம்மில் இருந்து திரும்பி வந்தபோது, அவரது வீட்டு வாசலில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் இதனை யார் கார் என்று கேட்டுக்கொண்டு 20 நிமிடம் தான் வெளியே நின்றதாகவும் அதன்பிறகு ஒரு குடும்பம் எங்களுடைய கார் என்று தன்னிடம் கூறியதாகவும் நோ பார்க்கிங்கில் வண்டியை எதற்காக விட்டிருக்கிறீர்கள் என்று கேட்டன் எனவும் இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டதாக தர்சன் தெரிவித்தார்.
வாக்குவாதத்தில் இந்த பிரச்சினை போய்க்கொண்டு இருந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் கை கலப்பாக மாறிய காரணத்தால் இருவரும் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஆதிசூடி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது ” தர்சன் தரப்பு எங்களை கெட்டவார்த்தையால் பேசியது மனைவியை தள்ளிவிட்டார்கள்” என்கிற குற்றச்சாட்டையும் முன் வைத்தார்.
இந்த விவகாரம் வழுக்க இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் காவல்துறையில் புகார் அளித்த நிலையில் இருவருடைய மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. நீதிபதியின் மகன் ஆதிசூடி தர்ஷன் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பெண் வன்கொடுமை உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. அதைப்போல, தர்ஷன் அளித்த புகாரின் அடிப்படையில் ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உப்பட மூன்று பிரிவுகளின் கீழ் ஆதிசூடி மீது ஜேஜே நகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இதனையடுத்து, கார் பார்க்கிங் விவகாரத்தில் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்ட ஜேஜே நகர் காவல்துறை தர்ஷன் மற்றும் அவருடைய உறவினர் லோகேஷ் என்பவரையும், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்துள்ளது. தற்போது இவர்களிடம் ஜேஜே நகர் காவல்துறை தீவிரமாக விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை முடிந்த பிறகு அங்கு என்ன நடந்தது யார் மீது தவறு என்பது தெரியவரும்.