காதலுக்கு சம்மதம் தெரிவித்த பெற்றோர்…விரைவில் ஹ்ரித்திக் ரோஷனுக்கு திருமணம்.!?
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ஹ்ரித்திக் ரோஷன் கடந்த 2014-ம் ஆண்டு சுஷானே என்பவரை விவகாரத்து செய்தார். இதனை தொடர்ந்து, சபா ஆசாத் என்பவரைக் ஹ்ரித்திக் ரோஷன் சமீப ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.
எனவே ஹ்ரித்திக் ரோஷனும் எந்த ஒரு பட விழாவிற்கு சென்றாலும் சரி, அல்லது வேறு ஏதும் விழாவிற்கு சென்றாலும் சரி தனது காதலி சபா ஆசாத் உடன் தான் சென்று வருகிறார். குறிப்பாக சமீபத்தில் கோவாவில் தனது முன்னாள் மனைவியின் ஹோட்டல் திறப்பு விழா ஒன்றிற்கு கூட ஹ்ரித்திக் ரோஷன் தனது காதலியுடன் தான் கலந்துகொண்டிருந்தார்.
மேலும், இவர்களின் காதலுக்கு ஹ்ரித்திக் ரோஷனின் குடும்பம் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. எனவே, அவசரப்பட்டு திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தெளிவான முடிவு ஒன்றையும் எடுத்துள்ளாராம்.
ஏனென்றால், இவர்கள் இருவருக்குமே குறிப்பிட்ட சில வேலைகள் அதிகமாக இருக்கிறதாம். எனவே அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு இந்த வருடம் இறுதியில் திருமணம் பெற்றோர்களின் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்துகொள்ள ஹ்ரித்திக் ரோஷன் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.