பாண்டியன் ஸ்டோர்ஸில் முற்றுகிறதா பனிப்போர்?! இதில் யார்தான் ஹீரோயின்?!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வெற்றிகரமான தொடர்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். தொலைகாட்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான தொடர் என்ற பெருமை கொண்டது. கூட்டு குடும்பத்தை பெருமையாக சொல்லும் இந்த சீரியலில் நடிப்பவர்களிடையே யார் ஹீரோயின் என பனி போரே நடந்து வருகிறதாம்.
சமீபத்தில் நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில், சிறந்த நடிகைக்கான நாமினேஷனில் அந்த சீரியலில் சித்ரா ( முல்லை ) பெயர் வந்தது. துணை நடிகை பிரிவில் சித்ரா ( தனலட்சுமி) பெயர் வந்தது. இதனால் அந்த சீரியல் சீனியர் நடிகைக்கு கோபம் வரவே நிகழ்ச்சிக்கு இடையே சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்த சண்டை தற்போது முற்றி வருவதால் இந்த சீரியலில் எப்போது வேண்டுமானாலும் இவருக்கு பதில் இவர் என்று வரும் என கூறுகின்றனர். இரு நடிகைகளையும் ஒப்பந்தம் செய்கையில் நீங்கள்தான் ஹீரோயின் என்று கூறி தயாரிப்பு தரப்பு கூறி ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறது.